பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த அபிராமி, தனது சக போட்டியாளர்களின் குடும்பங்களை சந்தித்துவரும் நிலையில், முதல் முறையாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்கள் ஒருவர் அபிராமி. பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய அவர் தொடர்ந்து பல பேட்டிகளை கொடுத்து வந்தார்.அதேபோல, தனக்கு பிடித்த போட்டியாளர்களின் குடும்பத்தை சந்தித்து வருகிறார். 

அதன்படி மோகன் வைத்யாவை முதல் ஆளாக சந்தித்த அபிராமி, அவரது நெருங்கிய தோழி சாக்‌ஷி அகர்வாலையும் சந்தித்தார். அவரைத் தொடர்ந்து சான்டி மாஸ்டரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்த அபிராமி, அதற்கான போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில் அவர் லைட் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை  வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். மேலும் இவர் சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்துள்ள போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.