பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு விளையாடியவர் நடிகை அபிராமி. இவர் இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வரும் முகேன் ராவ் என்கிற மலேசிய பாடகரை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால் முகேன் இவருடைய காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தான் தொடர்ந்து அவரை காதலித்து கொண்டுதான் இருப்பேன் என், சமீபத்தில் கொடுத்த பேட்டிகளிலும் தெரிவித்திருந்தார். இது நாம் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் இன்று முதல் பிக்பாஸ் வீட்டில், பிரீஸ் டாஸ்க் நடக்க உள்ளது. முதல் ஆளாக முகேனின் அம்மா மற்றும் அவருடைய தங்கை ஜான் இருவரும், முகேனை சந்திக்க பிக்பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். இதுகுறித்த காட்சி இன்றைய ப்ரோமோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முகேன் தன்னுடைய தாய் மற்றும் தங்கையை தூக்கி தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தி இருந்தது பார்பவர்களையே பிரமிக்க வைத்தது.

முகேனை சந்திக்க அவருடைய  தாயார் மற்றும் அவருடைய தங்கை பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தருவதை பற்றி அறிந்த, நடிகை அபிராமி இவர்கள் இருவரும் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

முகேன் அம்மாவை பார்த்த தருணம் பெருமைக்குரியது. அவரை சந்தித்தது ஒரு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. அவரது புன்சிரிப்பான முகத்தை பார்த்து கொண்டே இருக்கலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.

View this post on Instagram

Janany janany... our setta girl 🦋💋

A post shared by 🦋Abhirami Venkatachalam (@abhirami.venkatachalam) on Sep 9, 2019 at 1:37am PDT