நிரூப் - அபிராமியை மோசமாக பேசியதால் மனமுடைந்த அபிராமி ...ஏடாகூடமான முடிவெடுக்கிறார்..இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது...
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ள இந்நிகழ்ச்சி தற்போது புதிய புதுப்பொலிவுடன் ஓடிடி-க்காக நடத்தப்படுகிறது. தமிழில் முதன்முறையாக இவ்வாறு நடத்தப்படுவதால், இதனை பிரபலப்படுத்தும் விதமாக இதற்கு முன் நடந்து முடிந்த சீசன்களில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர்கள் 14 பேரை தேர்ந்தெடுத்து களமிறக்கி உள்ளனர்.
அதன்படி முதல் சீசனில் இருந்து சினேகன், ஜூலி, சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் இருந்து ஷாரிக்கும், தாடி பாலாஜியும், மூன்றாவது சீசனில் இருந்து அபிராமி, வனிதாவும், நான்காவது சீசனில் இருந்து அனிதா, பாலாஜி முருகதாஸ் மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தியும், 5-வது சீசனில் இருந்து நிரூப், தாமரைச் செல்வி, சுருதி மற்றும் அபிநய் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதில் முதல் வார இறுதியில் சுரேஷ் சக்ரவர்த்தியும் (Suresh chakravathy), இரண்டாவது வார இறுதியில் சுஜா வருணியும் (suja varunee), மூன்றாவது வார இறுதியில் அபிநய் மற்றும் ஷாரிக் ஆகியோர் எலிமினேட் ஆகினர். மீதமுள்ள 10 பேருக்கிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில், நடிகை வனிதா (Vanitha) நேற்று இரவு திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் வெளியேறியபோது என்ன நடந்தது என்பது குறித்த வீடியோவை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, கன்பெஷன் ரூம் கதவை திறக்க சொல்லி கத்தி ஆர்பாட்டம் செய்கிறார் வனிதா. சக போட்டியாளர்கள் சமாதானப்படுத்த முயற்சி செய்தும் அவர் யார் பேச்சையும் கேட்காமல் கதவை திறக்க சொல்லி கத்துகிறார்.

இதையடுத்து வனிதாவை கன்பெஷன் ரூமுக்கு அழைக்கும் பிக்பாஸ் (BiggBoss), அவரிடம் பேசி மனதை மாற்ற முயற்சித்தார். ஆனால் வனிதாவோ இனி இங்கு இருந்தால் தான் மனரீதியாக பாதிக்கப்படுவேன் எனக்கூறுகிறார். இதையடுத்து அவரை வெளியேற அனுமதிக்கிறார் பிக்பாஸ். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வனிதா புயல் ஓய்வதற்குள்...அபிராமி புது சலசலப்பை ஏற்ப்படுத்தியுள்ளார்...டாஸ்க் தொடர்பாக அபிராமி மற்றும் அவரது முன்னாள் காதலர் நிரூப் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பர்சனுக்கு செல்கிறது..அப்போது நிரூப்.. அபிராமியை மோசமாக பேசியதால் மனமுடைந்த அபிராமி ...ஏடாகூடமான முடிவெடுக்கிறார்..இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது...
