பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நேற்றைய தினம் ஏவிக்ஷன் விஷயத்தில் கொடுத்த ஷாக்கில் இருந்து இன்னும் பல போட்டியாளர்கள் மீள வில்லை. எப்படியும் இந்த வாரம், மதுமிதா மூட்டையை கட்டி விடுவார் என எதிர்பார்த்த அவர்களுக்கு கமல் அவர் காப்பாற்ற பட்டதாக கூறிய வார்த்தை ஏமாற்றத்தை கொடுத்தது.

குறிப்பாக, வனிதா, ஷெரின் ஆகியோர் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் முக பாவனையில் இருந்து இது தெரிந்தது. அதே போல் எப்போதும் காதல் மன்னனாக பிக்பாஸ் வீட்டை சுற்றி வரும், கவினுக்கும் கமல் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுமிதா மீது, அனைத்து போட்டியாளர்களுக்கு கோபம் வர காரணமாக இருந்தவர் அபிராமி தான். அவர் முகனுக்கு பிறந்த குழந்தை என ஒரு பாட்டிலை கையில் வைத்து கொண்டு சுற்றியது. பிடிக்காமல் தன்னுடைய கருத்தை கூறிய போது தான், இந்த பிரச்சனை மிக பெரிதாக வெடித்து, மற்ற போட்டியாளர்களுக்கு மதுமிதா மீது கோபத்தை வரவழைத்தது.

ஆனால், நேற்றைய தினம் இவர் மதுமிதாவை தான் வெளியேற்ற நினைப்பர் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என மீராமிதுனை வெளியேற்ற நினைப்பதாக கூறினார். 

இந்த பிரச்சனை இன்றும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வெடிக்கிறது என்பது இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ மூலம் தெரிகிறது. "உன்னை நம்பினால் திடீர் என நீ நல்லவளா ஆகிடுவா, நீ விளையாடுறியா என கேட்கிறார் அபியை பார்த்து கேட்கிறார் வனிதா. அவருக்கு சப்போர்ட் செய்வது போல், சாக்ஷி மற்றும் ஷெரின் ஆகியோர் பேசுகிறார்கள்.

இதைத்தொடர்ந்து மிகவும் கோபமாக அந்த இடத்தில் இருந்து, பாத்ரூமிற்கு செல்லும் அபி, அழுதவாறு நான் வீட்டிற்கு போகவேண்டும் என்னை விட்டுடுங்க ப்ளீஸ், என கதறி அழும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தை பற்றியும் இன்று கமல் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.