aarya loves to amalapaul
ஆர்யாவின் லவ்வதிகாரத்தை பற்றி எழுதுவதென்றால் தனியாக ஒரு வெப்சைட்டை உருவாக்கி வியர்க்க வியர்க்க ஒரு வருஷம் உட்கார்ந்து எழுதலாம். அம்பூட்டு கதை இருக்கு அவரைப் பற்றி எழுத!
சமீபகாலமாய் ஆர்யாவை பற்றி பேச்சுவார்த்தையே இல்லையே! என்று ஏங்கியிருந்தவர்களின் ஏக்கம் போக்க இதோ ஒரு செய்தி...
தனது புதிய காருக்கு போலியாக புதுவை முகவரியை கொடுத்தார் என்று அமலாபால் மீது ஒரு பஞ்சாயத்து ஓடியது இல்லையா! அந்த சூழலில் ‘தேவையற்ற யூகங்களில் இருந்து வெளியே வர இப்போது படகில் பயணம் செய்ய விரும்புகிறேன்’ என்று தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தது அமலா பொண்ணு. உடனே, ‘சாலை வரியை மிச்சப்படுத்தி படகில் போகலாம்’ என்று ஆர்யா கிண்டலடித்தார். ‘உடம்பை வருத்தி சைக்கிள் ஓட்டி நீங்களும்தானே காசை சேமிக்கிறீங்க?’ என்று அமலாவும் விடாமல் நறுக் பதில் சொன்னார்.
உடனே ஆர்யா ‘உனக்காகத்தான் சேமிக்கிறேன். லவ் மீ அமலா’ என்று லவ்ஸியாக ஒரு ரிப்ளை தட்ட, அமலா பொண்ணு அதிர்ந்து போய்கிடக்கிறது.
ஆனால் கோலிவுட் பாய்ஸோ ஆர்யாவை நோக்கி ‘ஓ.கே.! ஓ.கே! நீ நடத்துடி டிராமாவை’ என்று கலாயத்துக் கொட்டியுள்ளனர்.
மச்சானுக்கு பிரியாணியெல்லாம் மச்சம்!
