பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஆரிக்கு எதிராக போட்டியாளர்கள் செயல்படுவதை பார்க்க முடிகிறது. அதே நேரத்தில், ஆரி மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதை உணர்ந்து, கடந்த சில தினங்களாக கொஞ்சம் ஓவரா தான் பேசுகிறார் என பாலா மற்றும் ரியோ ஆர்மியை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.

வீட்டில் உள்ளவர்கள் தனக்கு எதிராக செயல் படுகிறார்கள் என்பதை அறிந்த போதிலும் அதையெல்லாம் துளியும் கண்டு கொள்ளாமல், ஆரி தன்னம்பிக்கையோடு விளையாடி வருவதையும் பார்க்க முடிகிறது. இவரது இந்த குணமும், பொறுமையும் தான் இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்க செய்துள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வரும் வாக்கியத்தின் அடிப்படையில் அந்த வாக்கியம் யாருக்கு சரியாக பொருந்தும் என்று கூறும் டாஸ்க் நேற்று நடந்தது. அந்த டாஸ்க் இன்றும் தொடர்வது முதல் புரோமோவில் இருந்து தெரிகிறது.

மேலும் செய்திகள்: இணை இயக்குனரை ரகசியமாக கரம் பிடித்த 'கயல்' ஆனந்தி..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
 

ஆரி தனக்கு வந்த வாக்கியம் குறித்து கூறுகையில் ’ரம்யா நேற்று ஒரு விஷயம் கூறினார்கள். நான் சேஃப் கேம் விளையாடுகிறேன் என்று இவர் பேசிக்கொண்டிருக்கும் போது, குறுக்கிட்ட ரம்யா ’சேஃப் கேம்’ என்று நான் சொல்லவில்லை, ஒன்சைடு என்றுதான் கூறினேன் என்று கூற...  அதற்கு பதிலளித்த ஆரி, ஒன் சைடு மற்றும் சேஃப் கேம் ஆகிய இரண்டையும் நேற்று சொன்னீர்கள் என்று கூறி அவரது வாயை அடைகிறார்.

மீண்டும் குறுக்கிட்ட ரம்யா ’நேற்றும் நான் சொன்னது ஒன்சைடு தான் ’சேஃப் கேம்’ என்று சொல்லவில்லை என்று கூறினார். அப்போது ’நான் பேசி முடிக்கும் வரை நீங்கள் பேச வேண்டாம் என்று நினைக்கின்றேன். அதுதான் விதியிலும் உள்ளது. தயவு செய்து அதை ஃபாலோ பண்ணுங்கள். 

மேலும் செய்திகள்: இடை தெரிய சிவப்பு நிற மெல்லிய சேலையில்... இளசுகளை ஏங்க வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!
 

என்னைப்பற்றி மற்ற போட்டியாளர்கள் சொல்லும்போது நான் பதில் பேசவில்லை. இதுதான் உங்களுடைய பிரச்சனை. உங்களது குறையை சுட்டிக் காட்டும் போது நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்று ஆரி கூற, அதன்பிறகு ரம்யா செம காண்டில் இருக்கும் காட்சிகள் காட்டப்படுகிறது.

அந்த புரோமோ இதோ...