“உங்கள பத்தி நெத்தியில அடிச்ச மாதிரி சொல்லுவேன்”... ஹவுஸ்மேட்ஸால் கொந்தளித்த ஆரி...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை குரூப்பிஸம் என்ற வார்த்தை மிகப்பெரும் பிரச்சனையை கிளப்பி வருகிறது. 

Aari Arjuna Angry Speech Bigg boss Promo video

பிக்பாஸ் சீசன் வீட்டிற்குள் என்று அர்ச்சனா காலடி எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து ஒரே ரணகளம் தான். அதுவும் டாஸ்க் என்ற பெயரில் நடக்கும் ஒவ்வொரு போட்டியின் போது ஒரு போட்டியாளர் மற்றொருவருடன் முட்டிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

Aari Arjuna Angry Speech Bigg boss Promo video

 

இதையும் படிங்க: மலை உச்சியில் பிறந்தநாள் கொண்டாட்டம்... சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜனின் அசத்தல் கிளிக்ஸ்...!

அதில் ஆரி மற்றும் அனிதா சம்பத்தை மோசமாக பர்மாமேன்ஷ் செய்ததாக மற்ற ஹவுஸ்மேட்கள் சேர்ந்து தேர்வு செய்கின்றனர். இதனால் கடுப்பான ஆரி “இந்த வீட்டிற்குள் குரூப்பிஸம் இருக்க கூடாது என்று தான் எல்லாரும் முயற்சி செய்கிறோம். ஆனால் திரும்ப திரும்ப குரூப்பிஸம்,  ஃபேவரிசம் நடக்கிறது. இதனால்தான் நானும் அனிதாவும் இந்த இடத்தில் நிற்கிறோம். யார் என்ன பேசுகிறீர்கள். யார் யாருக்கு ஃபேவராக இருக்கிறீர்கள் என என்னால் நெத்தியில அடிச்ச மாதிரி சொல்ல முடியும்” என ஆரி கொந்தளிக்க, மற்ற ஹவுஸ்மேட்ஸ் இப்பவே சொல்லுங்களேன் என கோபமாக கேட்கின்றனர். 

Aari Arjuna Angry Speech Bigg boss Promo video

 

இதையும் படிங்க: பாலத்தில் அமர்ந்த படி அனிகா கொடுத்த அதிர்ச்சி போஸ்... தலையில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மற்ற எந்த சீசன்களிலும் இல்லாத அளவிற்கு இந்த முறை குரூப்பிஸம் என்ற வார்த்தை மிகப்பெரும் பிரச்சனையை கிளப்பி வருகிறது. எல்லோரும் தங்களுக்குள் ஒரு டீமை உருவாக்கிக் கொண்டு குரூப்பிஸம் செய்வதாக சுரேஷ் சக்கரவர்த்தி ஏற்கனவே குற்றச்சாட்டியிருந்தார். தற்போது ஆரி கொந்தளித்திருக்கிறார். இதோ அந்த வீடியோ.... 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios