பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, ஆரவை காதலிப்பதாக கூறி அனைவருக்கு ஷாக் கொடுத்தவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து சில நாட்கள் கழித்து நான் உன் மேல் உள்ள காதலை மறந்து விட்டேன் நீயும் மறந்து விடு என சாதாரணமாக கூறியது பலருக்கும் வியப்பாக தோன்றியது.

இந்நிலையில் சில நாட்களாக ஓவியாவுக்கு ஆதரவாக பேசி அவரை காதலிப்பது போல  நடந்துக்கொண்டார் ஆரவ். இதனை பார்த்த ரசிகர்கள் பலர் ஆரவ் மற்றும் ஓவியா இருவரும் காதலித்து வருவதாகவும் வெளியே வந்ததும் கண்டிப்பாக திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் நினைத்தனர்.

தற்போது இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், இந்த வாரத்திற்கு ஆரவ் எலிமினேஷனுக்காக ஓவியாவை நாமினேட் செய்துள்ளார். இவர் இப்படி செய்துள்ளது ஓவியா முன் நல்ல விதமாக பேசிவிட்டு அவருக்கு பின்னால் சென்று முதுகில் குத்துவது போல் உள்ளது என பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறனறனர்.