Aarav Exclusive interview on Oviya love

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது. நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த 100 நாள் பிரம்மாண்டமான போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட ஆரவ் விற்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.

தற்போது ஆர்வ்-விற்குக் கிடைத்துள்ளது 50 லட்சம் ரூபாயில் 14 லட்சம் ரூபாயாக வரி செலுத்த வேண்டும். ஆக ஆரவ்க்கு கிடைத்தது வெறும் 36 லட்சம் ரூபாய் தான். ஆனால் ஓவியாவுக்கு ஒரு விளம்பரத்துக்கு வர கோடிகளில் அள்ளுகிறார்.

தற்போது வெற்றி களிப்பில் இருக்கும் ஆரவ் தனக்கு ஓட்டுபோட்ட பார்வையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அதோடு இந்த பிக் பாஸ் டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

ஆராவ்வின் இந்த ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல் தெரியவில்லை, கடந்த சில வாரங்களாக தலைவி ஓவியா விளம்பரப்படங்களில் செம பிசியோ பிசியாக இருக்கிறாராம். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் குழப்பத்தில் உள்ளனராம். ஆரவ்வின் இந்த பதிலால் மக்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.