Aamir Khan Steps In To Help Sarika Reclaim Her House
நடிகர் கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகா வீடு இழந்து தற்போது அந்த வீட்டை மீட்க நடிகர் அமிர்கானின் உதவியை நாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா. இவர் கமலிடம் இருந்து விலகிய பின், மும்பையிலுள்ள பானு அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் இவரது தாய் காலமானார். இதற்குபின் இவர்கள் தங்கியிருந்த வீடு டாக்டர் விகாஸ் தாக்கர் என்பவரது கைக்கு சென்றுவிட்டது.
இதையடுத்து அந்த வீட்டில் சரிகா தங்க முடியவில்லை. இந்த வீடு மும்பையில் பணக்காரர்கள், சினிமா நட்சத்திரங்கள் வசிக்கும் பகுதியில் இவர்கள் இருந்த பானு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது. இந்த வீட்டை சரிகா சம்பாதித்த பணத்தில் அவரது தாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த வீட்டை தனது இறப்புக்குப் பின்னர் தனது மகளுக்கு என்று எழுதி வைத்து இருப்பதாக கூறப்பட்டாலும், உயிலில் விகாஸ் டாக்டருக்கு எழுதி வைத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனால், அந்த வீட்டை அவர் ஆக்கிரமித்துள்ளார்.
மேலும் ஜூஹூ பீச்சில் உள்ள ஒரு வீடும் அவரது கையை விட்டுச் சென்றுள்ளது. இந்த வீட்டை மீட்பதற்காக பாலிவுட் நடிகர் அமிர்கானின் உதவியை தற்போது நாடி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சரிகா தங்குவதற்கு வீடு இல்லாமல் வாடகை வீட்டில் தங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகை சரிகாவின் தோழிதான் நடிகர் இம்ரான் கானின் தாய் நுஸ்ரத். அமிர்கானின் சகோதரி நுஸ்ரத். எனவே, அவர் வழியாக அமிர்கானின் உதவியை சரிகா நாடியிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
