உலக நாடுகளை கடந்து, தற்போது இந்தியாவிலும் தன்னுடைய சுய ரூபத்தை காட்டி கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், மக்கள் அதிக அளவில் பாதிக்க கூடாது என்பதற்காக நேற்றுடன் முடியவிருந்த ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்து மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இதனால் அன்றாடம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை வைத்து வயிற்று பசியை தீர்த்து வந்த லட்சக்கணக்கான கூலித்தொழிலாளர்கள் ஒருவேளை உணவு கூட இன்றி பசியால் வாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒட்டு மொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டிய யாஷிகா... சொக்கிப் போன ரசிகர்கள்...!

மேலும் இப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் முதல் தொழிலதிபர்கள் வரை பலர் தானாக முன்வந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.ஏற்கனவே, பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், அமிதாப் பச்சன், சோனு சூட், அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் உதவிகளை வாரி வழங்கியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அமீர் கான், ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரத்தை மறைத்து வைத்து ஏழைகளுக்கு விநியோகித்ததாக கூறப்பட்டது. 

இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏழைகள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு இரவு நேரத்தில் லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரி நிறைய இருந்த ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகளை அங்கிருந்தவர்களுக்கு விநியோகித்துள்ளனர்.  அதை வாங்கிச் சென்றவர்கள் பிரித்துப் பார்த்தபோது அதில் ரூ. 15 ஆயிரம் ரொக்கம் இருந்ததாகவும் கூறி புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகின. அதை பாலிவுட் நடிகர் அமீர் கான் தான் செய்ததாகவும், தான் செய்யும் உதவி வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக இப்படி கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணத்தை மறைத்து வைத்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது. 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

இந்நிலையில் அன்று இரவு நடந்த சம்பவம் குறித்து நடிகர் அமீர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து விநியோகித்தது நான் இல்லை. அது முற்றிலும் பொய்யான கதை அல்லது யாரோ ராபின்ஹுட் தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத செயல். பத்திரமாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார். அமீர் கானின் இந்த விளக்கத்தால் ஆடிப்போன மக்கள், அப்படி கோதுமை மாவில் பணத்தை மறைத்து வைத்து கொடுத்த தாராள பிரபு யார் என்று சிந்தித்து வருகின்றனர்.