அஜித்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் ஏன் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.

வெளிநாடுகள் என்று சொன்னதும் அமெரிக்கா, சீனா, ரஷ்யானு எல்லா நாடுகளும் உங்கள் தலைக்குள் வந்துட்டு போகும். ஆனால், நீங்கள் சற்றும் நினைத்துப் பார்த்திராத ஒரு நாட்டில் கூட அஜித்துக்கு ரசிகர்கள் இருக்காங்க.

ஆம். பாகிஸ்தானில் கூட அஜித்துக்கு ரசிகர்கள் இருக்காங்க.

அஜித் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடாத ஆளே இல்லை.

இந்த பாடல் தன்னை வெகுவாக கவர்ந்துவிட்டது பாகிஸ்தானில் இருக்கும் ரசிகர் ஓருவர் டிவிட்டரில் அனிருத்துக்கு ஹேஷ் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

RJ அடீல் கான் என்பவர் தான் அந்த பாகிஸ்தானி ரசிகர்.

அவர், "எனக்கு இந்ப் பாடலில் ஒரு வார்த்தை கூட புரியவில்லை, ஆனால் அந்தப் பாடலை ரசிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த அனிரூத், “இசைக்கு மொழி இல்லை” என்று தெரிவித்தார்.