அஜித் - ஷாலினி நட்சத்திர தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். பெரும்பாலும் குழந்தைகளை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து வருவதை தவிர்க்கும் அஜித். தங்களது மீது விழுந்த ஸ்பார்ட் லைட் வெளிச்சம், குழந்தைகள் மீது விழக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

ஆத்விக் பிறந்தநாளில் இருந்தே குட்டி தல என்ற செல்ல பெயர் கொடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரசிகர் மன்றம் இல்லாவிட்டாலும் தல அஜித்திற்கான ரசிகர்கள் கூட்டம் ஏராளம். தல ரசிகர்கள் அஜித் மீது எந்த அளவிற்கு பாசம் வைத்துள்ளனரோ, அதே அளவிற்கு அவரது மகன், மகள் மீதும் பாசத்தை பொழிகின்றனர். 

இந்நிலையில் இன்று ஆத்விக் தனது 6வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

மார்ச் 2ல் பிறந்தநாள் காணும் 2.1K கிட்ஸின் எதிர்காலமே மாண்புமிகு ஆத்விக் அஜித்குமார் என போஸ்டர் வைத்து தூங்கா நகரையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.