நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொள்ள வரும் ரசிகர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி திரைக்கு வந்த லியோ திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. லியோ படத்தின் வெற்றியால் நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் செம்ம குஷியில் உள்ளனர். இப்படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாட முடிவெடுத்த விஜய், பிரம்மாண்டமாக சக்சஸ் மீட் ஒன்றையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

அதன்படி லியோ படத்தின் சக்சஸ் மீட் நவம்பர் 1-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு 200 முதல் 300 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், ரசிகர்கள் பேருந்தில் வர அனுமதியில்லை எனவும் காவல்துறை தரப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தற்போது அதில் மேலும் ஒரு டுவிஸ்ட் ஆக, லியோ சக்சஸ் மீட்டுக்கு வருபவர் வெறும் எண்ட்ரி பாஸ் மட்டும் கொண்டு வந்தால் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்களாம். அவர்கள் கையில் தங்களது ஆதார் அட்டையையும் அவசியம் எடுத்து வந்தால் மட்டுமே நேரு உள்விளையாட்டு அரங்குக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.

அதுமட்டுமின்றி நாளை மாலை 4 மணி முதல் ரசிகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. அதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடாமல் இருப்பதற்காக தான் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

இதையும் படியுங்கள்... லியோவுக்கு முன் Fake ஆன பிளாஷ்பேக்குடன் வெளிவந்த தமிழ் படங்கள் இத்தனை இருக்கா..! லிஸ்ட் இதோ