aaa movie updations

நடிகர் சிம்பு தற்போது மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் திரைப்படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் இந்த படத்தில் சிம்பு மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா மற்றும் ஸ்டைலிஷ் இளைஞர் ஆகிய வேடத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் ஸ்ரேயா, தமன்னா ஆகியோர் நாயகிகளாக நடித்து வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நீதுசந்திரா மூன்றாவது நாயகியாக இணைந்ததார்.

இந்நிலையில் தற்போது நான்காவதாக ஒரு நாயகி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சிம்பு நடித்த 'சிலம்பாட்டம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சனாகான்' தான் அந்த நான்காவது நாயகி. இவர் இந்த படத்தில் கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.