AAA movie live updates
'அச்சம் என்பது மடமையடா' படத்தின் வெற்றியை தொடர்ந்து. சிம்பு நடித்து இன்று வெளியாகவுள்ள ' AAA ' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்க்க நிலவி வந்தது.
இந்நிலையில் திரையரங்க உரிமையாளர்களுக்கு KDM லைசென்ஸ் இன்னும் கிடைக்காதால் அதிகாலை திரையிடுவதாக இருந்த காட்சி ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் சிம்பு ரசிகர்கள் திரையரகத்தில் முன் சிறு ரகளையே செய்து விட்டனர்.
இதை தொடர்ந்து, பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் 12 மணிக்கு திரையிடப்பட்ட AAA படத்தை பார்த்து விட்டு பல ரசிகர்கள், திரையரகத்தில் இருந்த படியே தங்களுடைய கருத்துக்களை லைவ் அப்டேட் செய்து வருகின்றனர்.
முதல் பகுதியை மட்டுமே பார்த்துள்ள ரசிகர்கள் பலர் STR மாஸ் , ராக்கிங், சூப்பர் என புகழுத்து தள்ளி வருகின்றனர்.
