கடந்த சில நாட்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி நடித்த சீதக்காதி படத்தின் டிரெய்லர் ரிலீஸானதில் இருந்தே விஜய் சேதுபதி ரசிகர்கள் ரசிகர்கள் மெய் சிலிர்த்து மெர்சலில் உள்ளனர். இந்த படத்தில் சிறந்த நடிகராக இருக்கும் இவர், அய்யாவாக நடிப்பதற்கு அத்தனை வருத்தப்பட வேண்டிய அளவுக்கு என்ன நடந்திருக்கும் என உடனே தெரிந்துகொள்ளக் காத்திருக்கின்றனர். 

தமிழகத்தின் அடையாளமாகவே படத்தில் சித்திரிக்கப்படும் அய்யா கேரக்டரை மேலும் பெருமைப்பட வைக்கும் அளவுக்குச் சிலை திறக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது படக்குழு. இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி படத்தின் கதை குறித்துத் தெரிந்து கொள்ளலாம் என்ற நோக்கில் எக்ஸ்பிரஸ் மாலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும், இயக்குநர் மகேந்திரன் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைக்கிறார். சீதக்காதி படக்குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாகத் தெரிகிறது.