பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுகிழமை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பாலிவுட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் சுஷாந்த் மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியாததால் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கியுள்ளனர். 

 

இதையும் படிங்க: “இனி இவருக்கு பதில் இவர்”.... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் அதிரடி மாற்றம்...!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் சிலர் சுஷாந்தின் வளர்ச்சி பிடிக்காமல் அவரது படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் சுஷாந்திற்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பாட்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: 8 வருஷத்துக்கு முன்னாடி அனிருத் இப்படி தான் இருந்தார்... வைரலாகும் பிரபல நடிகர் ஷேர் செய்த போட்டோ...!

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது வீட்டில் வேலை பார்த்தவர்கள், முன்னாள் காதலி உட்பட 19 பேரிடம் இதுவரை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பாந்த்ரா வீட்டில் இருந்து 5 டைரிகள் கைப்பற்றப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த டைரியில் தனது மரணத்திற்கான காரணம் குறித்து சுஷாந்த் ஏதாவது குறிப்பு எழுதியுள்ளார் என போலீசார் தீவிரமாக அலசி ஆராய்ந்து வருகின்றனர். இப்படி சுஷாந்த் மரணம் குறித்து அடுத்தடுத்து அதிரடி தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களை ஒரே ஒரு வீடியோ மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க: 3வது திருமணத்திற்கு ஜூன் 27-யை தேர்ந்தெடுத்தது ஏன்?... லைவ் வீடியோவில் கண்ணீர் விட்டு கதறிய வனிதா....!

பார்க்க அச்சு, அசலாக சுஷாந்த் சிங் ராஜ்புட் போலவே இருக்கும் இளைஞர் ஒருவரின் டிக்-டாக் வீடியோ தான் அது. அப்படியே பார்க்க சின்ன வயசு சுஷாந்த் போலவே இருக்கும் அந்த நபரின் நடை, உடை, பாவனை அனைத்துமே அவரையே பிரதிபலிக்கிறது. இதனால் நம்முடைய கனவு நாயகன் இறக்கவில்லை இவர் வடிவில் உயிர் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறார் என ரசிகர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். Saiki Saqqy Padaya  என்ற அந்த நபர் ஸ்லோமோஷனில் ஸ்டைலாக நடந்து வரும் அந்த வீடியோ இதோ...