’யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் இசையை விரும்பிக்கேட்பேன்’ என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசு ஏ.ஆர். அமீன் கூறியுள்ளார். இதுவரை செய்திகளில் அவ்வளவாக அடிபடாத அமீன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது விருப்பங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

’சகோ’ ஆல்பம் மூலம் தனது முதல் முத்திரையை பதித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமீன். அப்பாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய பல அனுபவங்களை முதன்முறையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். 11 வகுப்பு படிக்கும் இவர் இந்த இளம் வயதிலேயே தன் இசை வாழ்வுக்கு ஒரு களத்தை அமைத்துள்ளார். அவர் அளித்த மிக விரிவான பேட்டியில் தன் இசை உலக வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார்.

அவரிடம் முதல் கேள்வியாக இசை குடும்பத்தில் இருந்து வந்ததால் இயற்கையாகவே இசை மீதான ஆர்வம் உங்களுக்கு வந்துவிட்டதா எனக் கேட்டதற்கு ,’ நான் அப்படி சொல்ல மாட்டேன். தானாகவே இசையின் மீதான தேர்வு நடக்கவில்லை. ஆனால் அது ஒரு சீரான வளர்ச்சியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கற்று கொண்டேன்.நான் இசையை முறையாக பயின்றேன். நான் இப்போது யோசிக்கும் போது இசை என் வாழ்க்கையில் பின்னாளில்தான் நுழைந்தது தெரிகிறது. என் அப்பாவுடன் சேர்ந்து வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது எல்லாம் என்னையும் இசையோடு இணைத்தே ஒரு அடையாளம் உருவானது. அதன் பிறகுதான் நான் மெதுவாக இசையை கற்க ஆரம்பித்தேன். அப்பாவின் இசைப் பள்ளியான கேஎம்ஒரு திறப்பாக அமைந்தது. அது தொடங்கப்பட்ட பிறகே எனக்கு முதன்முறையாக ஒரு களம் கிடைத்தது. அது எனக்கு மிகப் பெரிய வெற்றி. அங்கே பல்வேறு விளையாட்டுக்கள் இடையில் இசையை கற்றேன். ஒரு கட்டத்திற்கு மேல் இசையை தீவிரமாக எடுத்து கொண்டேன். அதற்குப் பின்னால்தான் இசை என்னை மாற்றியது.

அப்பாவுடன் அடிக்கடி விவாதம் செய்வேன். அவருடன் விவாதிக்கும் எந்தநேரமும் நான் புதிய விசயங்களைக் கடந்து வருவேன். அவரோடு பல விஷயங்களை பகிர்ந்து கொள்வேன். அவர் என்னுடன் புதுவிதமான இசையை பகிர்ந்து கொள்வார். நாங்கள் தயாரிப்பு சம்பந்தமான விஷயங்களை பற்றியும் புதுவகையாக இசையை வெளிப்படுத்துவது பற்றியும் பேசுவோம். அது என்னை அப்படியே மெருகேற்றிவிடும். அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் நான் உருவானேன். அவரிடம் நான் திரைப்படங்களை பற்றியும் கேஜெட்ஸ், போட்டோகிராஃபி பற்றியும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இருவரும் இசையை விரும்புகிறேம். அவர்தான் எனக்கு டெக்னிகல் விஷயங்களில் பக்கபலமாக இருக்கிறார். என் வாழ்நாளில் அப்பாவுடன் சேர்ந்துகுடும்பத்துடன் பாரீஸ் போனதை மறக்கவே முடியாது.

அப்பாவின் இசையைத் தவிர மற்றவர்களின் இசையைக் கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் அமீன்,’நான் எல்லாவிதமான இசைகளையும் கேட்பேன். எட் ஷீரனை நான் அதிகம் விரும்புகிறேன். போஸ்ட் மலோனை பிடிக்கும். ஜெஸ்டின் பீபெர், யுவன் சங்கர் ராஜா, அனிருத், கன்யே வெஸ்ட் எனப் பலரை பிடிக்கும். அப்புறம் மைக்கேல் ஜாக்சன் என்ன மிகவும் பாதித்திருக்கிறார்என்று  அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் அமீன்.