Asianet News TamilAsianet News Tamil

’வர்ற தேர்தல்ல வச்சு செஞ்சுரலாம் ஜி’...பிரதமர் மோடியின் ட்விட்டுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்...

ட்விட்டர் பதிவில் சில பிரபலங்களுடன் தனது பெயரையும் டேக் செய்து மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடிவிடுத்திருக்கும்  வேண்டுகோளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். 

a.r.rahmans reply to prime minister modi
Author
Chennai, First Published Mar 14, 2019, 11:29 AM IST

ட்விட்டர் பதிவில் சில பிரபலங்களுடன் தனது பெயரையும் டேக் செய்து மக்களவை தேர்தல் தொடர்பாக பிரதமர் மோடிவிடுத்திருக்கும்  வேண்டுகோளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரத்தினச் சுருக்கமாகப் பதிலளித்துள்ளார். a.r.rahmans reply to prime minister modi

வரும் ஏப்ரல் 11ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டன. மக்களவை தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதில் இந்தியா உலக சாதனை புரிய வேண்டும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சங்கர் மகாதேவன், பி.வி. சிந்து, சாய்னா நேவல், கிரிக்கெட் வீரர் தோனி, சச்சின் டெண்டுல்கர், ரோகித் ஷர்மா, திரையுலக நட்சத்திரங்கள் மோகன்லால், நாகர்ஜூனா, சல்மான் கான், அமீர் கான் என பல்வேறு பிரபலங்களிடமும் வேண்டுகோள் விடுத்தார். @narendramodi
When @mangeshkarlata Didi, @sachin_rt and @arrahman say something, the nation takes note!I humbly request these remarkable personalities to inspire more citizens to come out and vote in the 2019 elections. 
A vote is a great way to make the people's voice heard.a.r.rahmans reply to prime minister modi

இதையடுத்து பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், வரும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் உங்க விருப்பப்படியே ’செஞ்சிரலாம் ஜி’  என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் பாஜகவை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் உள்ள நிலையில், ரகுமானின் இந்த பதிலும் அதை குறிப்பிட்டு பேசுவது போல் உள்ளது. A.R.Rahman @arrahman
 We will ji ..Thank you...

Follow Us:
Download App:
  • android
  • ios