Asianet News TamilAsianet News Tamil

கஜா புயலுக்கு ஏ.ஆர்.ரகுமான் நிவாரண நிதி... இன்னும் 35 நாட்கள் காத்திருக்கவேண்டும்...

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை  கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். இச்செய்தியை சற்றுமுன்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

a.r.rahman announces relief fund to gaja
Author
Toronto, First Published Nov 21, 2018, 10:11 AM IST

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை  கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கவிருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்துள்ளார். இச்செய்தியை சற்றுமுன்னர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.a.r.rahman announces relief fund to gaja

.ஏ.ஆர்.ரகுமான் தனது குழுவினருடன் அடுத்த மாதம் டிசமபர் 24ம் தேதியன்று டொரண்டோவில் மிகப்பெரிய அளவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இதில் அவருடன் டிரம்ஸ் சிவமணி, தமிழ் , இந்தி சினிமாவின் முன்னணிப் பாடகர்கள் உள்ளிட்ட ஏராளமான இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இதன் டிக்கெட் விற்பனை ஆன் லைனில் துவங்கி சில நாட்கள் ஆகின்றன.a.r.rahman announces relief fund to gaja

இந்நிலையில் சற்றுமுன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் ’டொரண்டோ நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையில் ஒரு பகுதி கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் வசூலாகும் தொகை சில கோடிகளில் இருக்கும் என்பதால் ரகுமானிடமிருந்து ஒரு பெரும் தொகை கஜா நிவாரண நிதிக்கு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் இத்தொகை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச்சேர இன்னும் 35 நாட்கள் காத்திருக்கவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios