நடிகர் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் துவங்க நடுவில் இன்னும் ஒரே ஒரு நாள் இருக்கும் நிலையில் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்களில் பல்வேறு சர்ச்சைகளால் பரபரப்புகள் கூடிவருகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், தி.முக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன்  உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஜூன் 22 விஜய்யின் 45 வது பிறந்தநாள் வருகிறது.இந்நிலையில் திரைப்படங்களுக்கு வடிவமைப்பு செய்யும் கிளிண்டன் என்பவர், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் எல்ல்லோரும் பயன்படுத்துகிற மாதிரியான ஒரு வடிவமைப்பை உருவாக்கியிருக்கிறார்.அவ்வடிவமைப்பில்,இலட்சக்கணக்கானோர் உயர்த்திப் பிடிக்கிற இடத்தில் விஜய்யை வைத்து, தரணி ஆள வா தளபதி என்று எழுதியிருக்கிறார்.

இவ்வடிவமைப்புக்கு முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது, அதற்குக் காரணம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதை வெளியிட்டதுதான்.விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று சொல்லி அதனைப் பகிர்ந்திருக்கிறார். அந்த டிசனில் தரணி ஆள வா தளபதி என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதால், விஜய்யின் அரசியல் வருகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் திமுக எம்.எல்.ஏ-வும், சினிமா தயாரிப்பாளருமான ஜே. அன்பழகன் இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள ஆர்வத்துடன் பார்க்கையில் இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.