‘என் வீட்டுக்கு போலிஸ் வந்திருக்காக’ என்று ட்வீட்டியதோடு காணாமல் போயிருந்த ஏ. ஆர்.முருகதாஸ் ‘இந்தப் படத்துல பாப்பா வித்தியாசமா இருக்காங்க’ என்ற ட்வீட்டுடன் மீண்டும் வலையுலகம் பிரவேசித்திருக்கிறார். அவர் பாப்பா என்று குறிப்பிட்டிருப்பது சரத்குமாரின் பாப்பா வரலட்சுமியை. படம் வரலட்சுமி ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் ‘வெல்வெட் நகரம்’.

ஆனால் நம்ம மேட்டர் பாப்பா பற்றியதல்ல. ரஜினியுடன் ஏ.ஆர்.முருகதாஸ் இணையவிருக்கும் அடுத்த படம் பற்றியது. யார் கதையை எவன் திருடி எக்கேடு கெட்டா நமக்கென்ன என்ற எண்ணத்துடன் ரஜினி முருகதாஸுடன் தான் அடுத்த படம் பண்ணப்போகிறார் என்கிற செய்தி உறுதியாகியிருக்கும் நிலையில், முருகதாஸின் முஸ்தீபுடன் பட நிறுவனம் கைமாறியிருக்கும் ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது பரவி வருகிறது.

சில தினங்களுக்கு முந்தைய நிலவரம் வரை ரஜினி-முருகதாஸ் காம்பினேஷன் படத்தை, ‘பேட்ட’, ‘சர்கார்’களின் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக இருந்தது. இது குறித்து வந்த செய்திகளுக்கு ரஜினி,முருகதாஸ் இருவருமே மறுப்பு சொல்லவில்லை.

ஆனால், லேட்டஸ்டாக இப்படத்தை தயாரிக்கவிருப்பது லைகா நிறுவனம் என்றும், சன் பிக்சர்ஸ் பட்ஜெட்டில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவார்கள். லைகா என்றால் நம் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடலாம் என்று ரஜினிக்கு கிரிமினலாய் ஒரு ஐடியா கொடுத்து கம்பெனியை கைமாற்றிவிட்டவர் சாட்சாத் முருகதாஸ்தான் என்றும் தகவல்கள் பரவுகின்றன.

சினிமாவுல ஹிட்டு, துட்டு இந்த ரெண்டுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் பாஸ்.