மிக்ஸி, கிரைண்டர்  கேக்குகளை வெட்டி ‘சர்கார்’ கோஷ்டிகள் கொண்டாடிய பார்ட்டிக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருப்பதாகச் சொல்கிறார்கள். நமக்கே கேட்பதற்கே கொஞ்சம் படபடப்பாகத்தான் இருக்கிறது. இது ரஜினி ரசிகர்களுக்குத் தெரிந்தால்...?

அதாவது செஞ்சுரி அடிப்பதில் ரஜினியை விஜய் மிஞ்சியதற்கான பார்ட்டியாம் இது. ‘சர்காரின் வசூல் நூறு கோடியைத் தாண்டிய வகையில் விஜய்க்கு இது ஆறாவது செஞ்சுரி கலெக்‌ஷன் படம். ஆனால் ரஜினியின் படங்களில் இதுவரை நூறு கோடி வசூலைத் தாண்டிய படங்களின் எண்ணிக்கை 5 மட்டுமே. ஆக விஜய் வசூல் விவகாரத்தில் ரஜினியை ஓவர் டேக் பண்ணியாச்சி என்று முருகதாஸ் முந்திக்கொண்டு வைத்த பார்ட்டியாம் இது.

’சிவாஜி’, ‘லிங்கா’, கபாலி’, காலா’ எந்திரன்’ ஆகிய 5 படங்கள் ரஜினியின் 100 கோடி வசூல் தாண்டிய படங்களாம். விஜய்க்கு , ‘பைரவா’, ’கத்தி’ ‘மெர்சல்’,’துப்பாக்கி’’தெறி’ படங்கள் வரிசையில் ‘சர்கார்’படம் 100 கோடி வசூலைத்தொட்ட ஆறாவது படமாம். இந்த ஆறில் மூன்று படங்களை இயக்கியவர் முருகதாஸாக இருக்க, அதை ஒட்டியே இந்த பார்ட்டி ஏற்பாடு பண்ணப்பட்டதாம். 

மிக்ஸி,கிரண்டர் மேட்டருக்கு டென்சனான அமைச்சர் பெருமக்களே கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க... இந்த ‘சர்கார்’ பார்ட்டிகளை இனி ரஜினி ரசிகர்கள் பத்தரமா பாத்துக்குவாங்க.