‘பராசக்தி’ படத்தைச் சுற்றி பல சர்ச்சைகள் நடந்து வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் ரூ.70 கோடிக்கு பங்களா கட்டி தருவதாக டீல் பேசப்பட்டதாக வலைப்பேச்சு பிஸ்மி அதிரடி குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்.
‘பராசக்தி’ படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்
டான் பிக்சர்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமான நிலையில், அவர் படத்தில் இருந்து திடீரென விலகினார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இணைந்தார். படப்பிடிப்புகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சிக்கி சிக்கினார்.
ரூ.70 கோடிக்கு சொகுசு பங்களாவுக்கு நடந்த டீல்
‘பராசக்தி’ படம் தொடர்பாக பேசிய வலைப்பேச்சு பிஸ்மி, “சிவகார்த்திகேயனுக்கு சம்பளத்திற்கு பதிலாக ஈசிஆரில் ரூ.70 கோடிக்கு பங்களா கட்டி தருவதாக ஆகாஷ் பாஸ்கரன் மூலம் டீல் பேசப்பட்டது. முதலில் ‘புறநானூறு’ என்ற பெயரில் தான் சுதா கொங்கரா படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் சில காரணங்களால் சூர்யா படத்திலிருந்து விலகிவிட்டார். பின்னர் தான் படம் ‘பராசக்தி’ என பெயர் மாற்றப்பட்டது. அதன் பிறகே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசப்பட்டது
அமலாக்கத்துறை வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன்
ஆனால் பணமாக தருவதற்கு பதிலாக சென்னை ஈசிஆரில் உள்ள சிவகார்த்திகேயனின் பழைய வீட்டை இடித்துவிட்டு ரூ.70 கோடிக்கு புதிய வீடு கட்டி தருவதாக ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் இருந்து ரத்தீஷ் டீல் பேசியுள்ளார். இதற்கு சிவகார்த்திகேயனும் ஒப்புக்கொண்டு ‘பராசக்தி’ படத்தில் நடிக்க கமிட் ஆனார்” என பிஸ்மி அதிர்ச்சித் தகவலை கூறி இருக்கிறார். அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கி இருக்கும் ஆகாஷ் பாஸ்கரன், தலைமுறைவாகி இருக்கும் நிலையில் அவர் தயாரித்து வந்த படங்களின் ஹீரோக்களான சிவகார்த்திகேயன், சிம்பு தனுஷ் ஆகியோரை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
அதிர்வலைகளை கிளப்பிய பிஸ்மியின் பேச்சு
இந்த நிலையில் பிஸ்மியின் இந்த பேச்சு தற்போது அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. ஆகாஷ் பாஸ்கரனை அமலாக்கத்துறை தீவிரமாக தேடி வரும் நிலையில் பிஸ்மியின் இந்த பேட்டி வழக்கிற்கு கூடுதல் வலு சேர்க்கும் என கூறப்படுகிறது.
