a fan throw the slipper on actress tamanna

ஐதராபாத்தில் நகை கடை திறப்பு விஒழாவிற்கு வருகை புரிந்த நடிகை தமன்னா மீது ரசிகர் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நகை கடைதிறப்பிற்கு வந்திருந்த நடிகை தமன்னாவை பார்க்க ஏகப் பட்ட ரசிகர்கள் வந்திருந்தனர் .திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த கரிமுல்லா என்ற நபர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி வீசி எறிந்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் ,சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாக கைதான கரிமுல்லா தெரிவித்து உள்ளார்.

நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து,அவரை கைது செய்தனர்.