கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று 96 . தற்போது இந்த படத்தை ரீமேக் செய்ய கன்னடம், தெலுங்கு, ஆகிய திரைத்துறையை சேர்ந்தவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

'96', திரைப்படம், ஒவ்வொரு மனிதரும் கடந்து வந்த பள்ளி பருவத்தையும், அவர்களுடைய அழகான பள்ளி பருவ நினைவுகள், மற்றும் காதல் ஆகியவற்றை நினைவு படுத்தும் வகையில் இருந்ததாக, ரசிகர்கள் தெரிவித்ததோடு, இந்த படத்தை வெகுவாக பாராட்டினார். 

மேலும், மூன்று வருடங்களாக த்ரிஷா நடிப்பில் வெளியான படங்கள் படு தோல்வி அடைந்து வந்த நிலையில்,  இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. மேலும் ராம், ஜானு என்கிற கேரக்டரில் விஜய்சேதுபதி, மற்றும் த்ரிஷா இருவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினர். 

இந்த நிலையில் '96' படத்தின் கன்னட ரீமேக் படமான '99' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வந்தது.

 

இந்த நிலையில் தற்போது '96' தெலுங்கு ரீமேக்கில் ராம் கேரக்டரில் நடிகர் சர்வானந்த் மற்றும் ஜானு கேரக்டரில் சமந்தா நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரேம்குமார் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.