நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் உணர்வு பூர்வமான வெற்றியை பெற்ற திரைப்படம் '96 '. 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

கன்னடத்தில் '99 ' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வரும் இந்த படத்தில். நடிகர் கணேஷ் விஜய் சேதுபதியாகவும்,  பாவனா திரிஷா வேடத்திலும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை இயக்குனர் ப்ரீத்தம் குப்பி இயக்கி வருகிறார்.

ஏப்ரல் 16 ம் தேதி, வெளியான  99 படத்தின் டிரைலர் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் 500 k லைக்குகளை பெற்றுள்ளது.

இன்று 1.6 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் பாவனா அழகு தேவதையாக மின்னுவதாகவும், ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் கூறி வருகிறார்கள்.