விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் கடந்த வருடம் வெளியான '96 ' படம், தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தை பெற்று தந்தது.

இரண்டு வருடமாக த்ரிஷாவின் நடிப்பில் வெளியான படங்கள் தொடர் தோல்வியடைந்ததால் துவண்டு போய் இருந்த இவருக்கு,  இப்படம் சரியான தேர்வாக அமைந்தது. பலர், ஜானு கதாப்பாத்திரத்தில் த்ரிஷா வாழ்ந்திருந்தார் என குறிப்பிட்டிருந்தனர்.

இந்த படத்தில் குட்டி ஜானுவாக நடித்திருந்தனர், நடிகை கௌரி. தற்போது கதாநாயகியாக அறிமுகமாக சரியான படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

 

'96 ' படத்தில், ஜானுவின் கதாப்பாத்திரத்தில் பொருந்தி நடித்திருந்த இவருக்கும் பலர் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்தது. இந்நிலையில் தற்போது இவருடைய புகைப்படம் ஒன்று வெளியாக ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது. இதில் மிகவும் குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் கௌரி. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.