பிரியங்கா சோப்ரா

திரையுலக கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் ஆஸ்கார். இது பெரும்பாலும் வெளிநாட்டு திரையுலக கலைஞர்களுக்கு அதிகமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 2008 ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். மேலும் கூடுதல் சிறப்பாக இந்த ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கும் படங்களின் பெயரை அறிவிக்கப் போவது நம்ம ஊர் அழகி பிரியங்கா சோப்ராதான். இவருடன்  ரோசாரியோ டாசன், ரெபெல் வில்சன், மலேசிய நடிகை மைச்சேல் இயோ, மிச்சேல் ரோட்ரிகோஸ் ஆகியோரும் ஆஸ்கார் பரிந்துரைப்பட்டியலை அறிமுகம் செய்கின்றனர்.

சிறந்த படம்

இந்நிலையில் தற்போது 90வதுஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சிறந்த படத்திற்கான தேர்வாக ”கால் மீ பை யுவர் நெய்ம்”,டார்கஸ்ட் ஹவர், டன்கிர்க், கெட் அவுட், லேடி பேர்ட், பேண்டம் தெர்ட், த போஸ்ட், த ஷேப் ஆஃப் வாட்டர், த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி போன்ற படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகை

சிறந்த நடிகைக்காக பரிந்துரை பட்டியலில் ”சாலி ஹாக்கின்ஸ்”, த ஷேஃப் ஆஃப் வாட்டர் படத்திற்காகவும், ”ஃபேரன்ஸஸ் மெக்டார்மண்ட்” த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்திற்காகவும், ”மார்காட் ராபி” ஐ டான்யா படத்திற்காகவும், ”சாய்ரஸ் ரோனன்” லேடி பேர்ட் படத்திற்காகவும், ”மெரில் ஸ்ட்ரீப்” த போஸ்ட் படத்திற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்களுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் கால் மீ பை யுவர் நெய்ம் படத்திற்காக டிமோத்தி கேலமைட்டும், பேண்டம் தெர்ட் படத்திற்காக டேனியல் டே லூயிஸும், கெட் அவுட் படத்திற்காக டேனியல் கலூயாவும், டார்கஸ்ட் ஹவர் படத்திற்காக கேரி ஓல்ட்மேனும், ரோமன் ஜே இஸ்ரேல் எஸ்க் படத்திற்காக டென்சல் வாஷிங்கடனும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்கள் ”மேரி ஜெ பிளைஜ்” மட்பவுண்ட் படத்திற்காகவும்,”அலிசன் ஜேனி” ஐ டான்யா படத்திற்காகவும், “லெஸ்லே மேன்வில்” பேண்டம் தெர்ட் படத்திற்காகவும், “லாரி மெட்காஃப்” லேடி பேர்ட் படத்திற்காகவும், ”ஆக்டவியா ஸ்பென்ஸர்” த ஷேஃப் ஆஃப் வாட்டர் படத்திற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்களுக்கான விருதுகளுக்கு ”வில்லியம் டெஃபோ”, த ஃப்ளோரிடா புரோஜெக்ட் படத்திற்காகவும், ”வுட்டி ஹேர்சல்ன்” த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்திற்காகவும், ”ரிச்சர்டு ஜெகின்ஸ்”  த ஷேஃப் ஆஃப் வாட்டர் படத்திற்காகவும், ”கிறிஸ்டோஃபர் பிளம்மர்” ஆல் த மனி இன் த வேர்ல்ட்  படத்திற்காகவும், ”சாம் ராக்வெல்” த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எபிங் மிசோரி படத்திற்காகவும், பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்களுக்கான விருதுக்கு ”கிறிஸ்டோஃபர் நோலன்” டன்கிர்க் படத்திற்காகவும், ”ஜோர்டான் பீலி” கெட் அவுட் படத்திற்காகவும், ”கெர்டா கெர்விக்” லேடி பேர்ட் படத்திற்காகவும், “பால் தாமஸ் ஆண்டர்சன்” பேண்டம் தெர்ட் படத்திற்காகவும், ”கியுலெர்மோ டெல் டோரோ” த ஷேஃப் ஆஃப் வாட்டர் படத்திற்காகவும் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்

சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்பட விருதுக்கு ஏ ஃபெண்டாஸ்டிக் விமன், த இன்சல்ட், லவ்லெஸ், ஆன் பாடி அண்ட் சோல், த ஸ்கொயர் போன்ற திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதில், கிட்டத்தட்ட 13 பிரிவுகளில் த ஷேஃப் ஆஃப் வாட்டர் படம் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.