சிம்பு மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த ’போடா போடி’  படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு, சிம்புவின் கியூட் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, 'போடா போடி' திரைப்படம்.  இன்று முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கும், விக்னேஷ் சிவன் முதல் முறையாக இந்த படத்தில் தான் ஒரு இயக்குனராக தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவக்கினார். அதே போல் வரலட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக , முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் குமார் கூறியுள்ளார்.  இரண்டாம் பாகத்திலும் சிம்புவே கதாநாயகனாக நடிப்பார் என்றும் தெரிவித்துள்ளார். சிம்பு ஜோடியாக இந்த படத்தில் ரித்திகா பால் என்பவர் அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் தற்போது வரை முடிவு செய்யப்படாத நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மேலும் முதல் பாகம் போலவே இந்த படமும் நடனம் சம்பந்தப்பட்ட படம் தான் என்பதும் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பை படத்தை படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.