6000 people have downloaded yet movie ...

இணையத் தளத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ள பாகுபலி - 2 திரைப்படத்தை, இதுவரை 6000 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

எல்லா மாநிலத்திலும் சிறப்பு காட்சியோடு, பாகுபலி சரியான நேரத்திற்கு திரையிடப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் பப்ளிசிட்டி தேடுவதற்காகவோ. அல்லது உண்மையிலேயே வெளியிடுவதில் தான் பிரச்சனை இருந்ததோ, தமிழகத்தில் மட்டும் முதல் ஷோவே 11 மணிக்கு தான் திரையிடப்பட்டது.

ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில், இன்று காலை 9 மணி அளவில், சட்டவிரோதமாக இணையத்தில் பாகுபலி 2 படம் வெளியானது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

என்ன நல்ல விசயம் என்றால், வெளியானவை அனைத்தும் வேறு மொழிகளே. இதில், இருந்து அனைத்து மாநிலமும் படத்தை இணையத்தில் வெளியிடுவதில் முனைப்போடு இருப்பது தெரிகிறது.

இதுவரை இணையத்தில் வெளியான பாகுபலி 2 படத்தை, சுமார் 6000 பேர் டவுன்லோடு செய்துள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இதனைத் தொடர்ந்து, மேலும் இணையத்தில் பாகுபலி-2 பரவாமல் இருக்க, அந்த குறிப்பிட்ட இணையதளங்களை படக்குழுவினர் முடக்கிவிட்டனர்.

படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, பாகுபலி 2 படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆனது அப்போவோ உசாராக இருந்திருக்க வேண்டாஆமாஆ ராஜமௌலி சார்.