தல அஜித் நடிப்பில், இந்த ஆண்டு வெளியான, 'விஸ்வாசம்' , மற்றும் 'நேர்கொண்ட பார்வை' ஆகிய இரண்டு படங்களுமே, மிக பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. 

இந்த இரு படங்களை தொடர்ந்து, மூன்றாவது படத்தின் படப்பிடிப்பும் இந்த வருடமே ஆரம்பமாகி உள்ளது. 'நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார் அஜித். 

இந்த படத்தின் ஆரம்ப பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், தல அஜித்தும், துப்பாக்கி சுடுதல் போட்டி, குடும்பத்துடன் ஓய்வு என இருந்து விட்டு, மீண்டும் 60 வது படத்திற்காக களத்தில் இறங்க உள்ளார். 

இது ஒரு புறம் இருக்க, இந்த படத்தில் அஜித்துடன் ஜோடி போடும் நடிகையை தேர்வு செய்யும் படலமும் மும்முரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்த லிஸ்டில் தற்போது நடிகை நயன்தாராவின் பேரும் அடிபட்டு வருகிறது.

நயன்தாரா - அஜித் நடிப்பில் ஏற்கனவே உருவான, 'பில்லா',  'ஏகன்', 'ஆரம்பம்', 'விஸ்வாசம்' , ஆகிய நான்கு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், சென்டிமெண்டாக, தல 60 ஆவது படத்திலும் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என பட குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

தொடர்ந்து 5 ஆவது முறையாக, நயன்தாராவை தேடியே அஜித் பட வாய்ப்பு செல்வதால், அஜித்துடன் ஜோடி சேர துடிக்கும் சில நடிகைகளை இந்த செய்தி செம்ம காண்டாக்கி உள்ளது.