5 heroines acting in keani movie

மலையாள திரையுலகில் மம்மூட்டி, பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து 7 படங்களை இயக்கியவர் எம்.ஏ.நிஷாந்த்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இவர் தற்போது தமிழில், 'கேணி' என்கிற படத்தை இயங்கி வருகிறார். . இந்தப் படத்தில் தமிழில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த மாஜி கதாநாயகிகள் 5 பேர் நடிக்க உள்ளனர்.

இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குனர் எம்.ஏ.நிஷாந்த் கூறுகையில், பொதுவாகவே நான் இயக்கும் படங்கள் சமூக கருத்துடைய படங்களாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அந்த வரிசையில் தான் தயாராக உள்ளது.

இந்தப்படத்தில் 80களில் கதாநாயகிகளாகக் கலக்கிய, ரேவதி, ஜெயப்பிரதா, அர்ச்சனா, ரேகா மற்றும் அனுஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தில் நீர் மக்களுக்கு பொதுவானது என்றும் அதனை அணை கட்டி தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்றும் துணிச்சலாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் படம் முழுவதும், கேரள, தமிழக எல்லைப் பகுதிகளிலும் கிராமங்களிலும் படமாக்கப்பட்டு வருகிறது.