இந்தியப் படங்களுக்கு சீனாவில் கிடைத்த வரவேற்பின் காரணமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் உலகின் மிகப்பெரிய இரண்டாவது திரைத்துறையைக் கொண்டுள்ள சீனாவை விடுவதில்லை. அந்த வகையில் இந்தியத் திரையுலகின் பிரமாண்டப் படைப்பான 2.0 படம் கடந்த  வாரம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளதுடன்,   உலக அளவில் 450 கோடி ரூபாய் வசூலையும் கடந்துள்ளதாகக் கூறியுள்ளனர். 

இந்தியாவிலிருந்து சென்ற திரைப்படங்களின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆமிர் கானின் சீக்ரெட் சூப்பர் ஸ்டார் 760 கோடி, சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் 294 கோடி, இர்ஃபான் கானின் இந்தி மீடியம் 221 கோடி என 2018ஆம் ஆண்டில் சீனாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், பாகுபலி 2 திரைப்படம் வெறும் 80 கோடியுடன் 31 நாட்களில் நடையைக் கட்டியது. காரணம், ராஜாங்கத்தைப் பிடுங்கிக்கொண்டு விரட்டப்பட்ட ஆட்சியுரிமை உள்ள மக்கள் அரசனின் கதையை எத்தனையோ முறை சீன தியேட்டர்கள் கண்டுவிட்டன. அவர்களுக்குத் தேவை புதிய கதை. மனித இனத்தின் மீதான புதிய பார்வை. இதெல்லாம் இல்லாத ஹாலிவுட் திரைப்படங்களையே சீன மார்க்கெட்டில் ரிலீஸ் செய்ய அஞ்சுகிறார்கள். ஆனால், 2.0 திரைப்படத்தை ரிலீஸ் செய்தே ஆக வேண்டும். காரணம், அதற்கான பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியத் திரையுலகம் போல நினைத்தபோது ரிலீஸ் செய்ய முடியாது என்பதால் 2019ஆம் ஆண்டு சீனாவில் ரிலீஸ் செய்கிறார்கள். இந்தப்படம் டப்பிங் செய்யப்பட்டும், சப்டைட்டிலுடனும் 10,000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 56,000 காட்சிகளாக (அதில் 47,000 காட்சிகள் 3Dயில்) 2019ஆம் ஆண்டு, மே மாதம் வெளியாக உள்ளது. I'm the only one super one   என ரஜினி பேசும் வசனத்தைப்போல, இதுவரை எந்த ஒரு வெளிநாட்டுப் படமும் இந்த அளவுக்கு வெளியானதில்லை.   சீனாவில் 2.0 திரைப்படத்துக்கு இருக்கும் ஒரே ஆதரவு. அங்கு ஏற்பட்டுள்ள உற்பத்தி பெருக்கத்தால் அதிகளவில் ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி பெருகியிருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போன்களினால் ஏற்படும் ஆபத்து சரிவர ரசிகர்களுக்குக் கடத்தப்பட்டால் 2.0 பெருமளவில் வெற்றிபெறும்.

படம் வெளியான முதல் நாளே தியேட்டரில் ஈ ஓட்டும் அவலம் அரங்கேறியது. முதல் நாளின் வெறும் 25, 30 கோடி என கல்லா கட்டிய இந்த படம் இப்போ 450 கோடி என வடை சுடுகிறது. இப்படி உள்ளூரில் இவங்க இங்க சிக்கி சீரழிஞ்சது பத்தாதாம் சீனா பக்கம் வேற போய் சீரழியப்போறாய்ங்களாம் என நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.