நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 46 வருடங்களுக்கு பின், 'காசி யாத்திர' என்கிற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 நடிகர் யோகிபாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க, 46 வருடங்களுக்கு பின், 'காசி யாத்திர' என்கிற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பழம்பெரும் இயக்குனர் வி.சி.குகநாதன் நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இந்த படத்தை புகழ்மணி என்பவர் இயக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்திற்கு 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைத்துள்ளனர் படக்குழுவினர்.

கடந்த 1973ஆம் ஆண்டு வெளியான 'காசி யாத்திரை' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகவுள்ளது. எஸ்பி முத்துராமன், இயக்கிய இந்த படத்தில், பழம்பெரும் நகைச்சுவை நடிகர்களான விகே ராமசாமி, சோ ராமசாமி, தேங்காய் சீனுவாசன், எம்.ஆர்.ஆர். வாசு, சுருளிராஜன், மனோராமா உள்பட பலர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும், இப்படத்தின் அதிகார பூர்வ அறிவிப்பு ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.