Asianet News TamilAsianet News Tamil

நடுரோட்டில் கமல் பட நடிகையை தாக்கி விட்டு பணம் - செல்போன் திருட்டு!

பிரபல நடிகையை, நடுரோட்டில்  தாக்கிவிட்டு அவரிடம் இருந்து,  திருட்டு கும்பல் ஒன்று பணம் - செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
4 members theft for kamal movie actress money and celphone
Author
Chennai, First Published Jan 21, 2019, 12:24 PM IST

பிரபல நடிகையை, நடுரோட்டில்  தாக்கிவிட்டு அவரிடம் இருந்து,  திருட்டு கும்பல் ஒன்று பணம் - செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பிறந்து வளர்ந்து நடிகையானவர் பர்ஹீன். இவர்  நடிகர் கமல்ஹாசன் நடித்த 'கலைஞன்' படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ் படங்களில் நடிக்க வில்லை. ஆனால் கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.

4 members theft for kamal movie actress money and celphone

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகரனை காதலித்து திருமணம் செய்துகொண்டு டெல்லியிலேயே செட்டிலானார்.  தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் பர்ஹீன் நேற்று தன்னுடைய காரில் ஷாப்பிங் மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, இவருடைய காரை பின்தொடர்ந்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல் பர்ஹீன் சிக்னலில் காரை நிறுத்தியபோது  கார் கண்ணாடியை உடைக்க முயற்சித்துள்ளது.

4 members theft for kamal movie actress money and celphone

இதனால் ஆத்திரமடைந்த பர்ஹீன், காரை ஓரமாக நிறுத்தி கண்ணாடியை உடைக்க முயன்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவர் சண்டை போட்டுக்கொண்டிருந்த போது இருவர் பர்ஹீன் காரில் வைத்திருந்த 16 ஆயிரம் பணம், அவருடைய பர்ஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்ப முயற்சித்துள்ளனர்.

அவர்களை தடுக்க முயன்றபோது, 4 பேர் கொண்ட கும்பல் பர்ஹீனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியது.  இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு   விரைந்து வந்த போலீசார், இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

4 members theft for kamal movie actress money and celphone

போலீசாரின் விசாரணையில், இந்த நான்கு பேரும் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் என்றும், கார் கண்ணாடியை உடைப்பது போல் செய்து, ஓட்டுனரின் கவனத்தை திசை திருப்பி இதுபோல் பல திருட்டு சம்பவங்களில் இவர்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios