*பாகுபலியின் ஹாட் ஜோடியான பிரபாஸ் - அனுஷ்காவுக்கு தெலுங்கு மட்டுமில்லாமல் இந்திய பத்திரிக்கைகளே காதல் கல்யாணம் நடத்தி வைத்தன. அவர்களின் குழந்தைக்கு காது குத்து விழா எடுக்காதத்துதான் பாக்கி. இது இப்படியிருக்க, பிரபாஸின் வீட்டில் அவருக்கு சீரியஸாக பெண் பார்க்க துவங்கியுள்ளனர். இந்த நிலையில்,  தான் புதிதாக கமிட் ஆகியிருக்கும் ஜானி படத்தில் தனக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவை டிக் அடித்திருக்கிறார் பிரபாஸ். ஆனால் டைரக்டரின் விருப்பமோ அனுஷ்காதான். ஆனால் ஹீரோவை மீறி என்ன பண்ண? 
(இஞ்சி இடுப்பழகியை கைவிட்டுடாதீங்க பிரபாஸ்)

*நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் படமொன்றில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் ‘லாபம்’ படம் தான் அது. இப்படத்துக்காக இமான் இசையில் மெலடி பாடல் ஒன்றை பாடியும் உள்ளார் ஸ்ருதி. விவசாய சப்ஜெக்ட்தான் இந்தப் படத்தின் கதையுமாம். 
(களத்துமேட்டு கதைக்கு விஜய்சேதுவின் கலர் அருமையா ஒத்துப்போகுமேடா!)

*தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் ஷூட்டிங், பட்ஜெட் பிரச்னையால் நின்று போய் இழுத்தடிக்கப்படுகிறது! எதிர்வரும் தீபாவளிக்கு அது ரிலீஸாவது கஷ்டம்! என்று கிளம்பிய தகவலால் தயாரிப்பாளர் போனி கபூர் செம்ம காண்டாகிவிட்டாராம். அஜித்தே இது பற்றிப் பேசும் முன், அவரே போனில் வந்து விளக்கம் சொன்னாராம். ஆனாலும் இப்படியான தகவல்கள் கிளம்புவது தல அஜித்தை எரிச்சல் செய்துள்ளதாம். 
(தலயோட போட்டோவை வெச்சாலே கோடி கோடியா கொட்டுமே! அவர் படத்துக்கே இப்படில்லாம் நிலைமையா?)

*லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் & விஜய்சேதுபதி’ இணைந்து மிரட்டும் ‘மாஸ்டர்’ படத்தின் அடுத்தடுத்த போட்டோக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இவை அனைத்தையும் ‘அந்தப்படத்தின் காப்பி, இந்தப் படத்தின் காப்பி, கொரியன் படத்தின் காப்பி!  படத்தின் கதையும் காப்பிதான்’ என்றெல்லாம் கழுவிக் கழுவி ஊற்றுது ஒரு டீம், அவற்றை வைரலாக்குது இன்னொரு டீம். இதன் பின்னணி யாரென்று பார்த்தால், லோகேஷின் தடாலடி வளர்ச்சியைப் பிடிக்காத ஹிட் இயக்குநர்கள்தானாம். கைதி சூப்பர் டூப்பர் ஹிட், விஜய்யை இயக்குகிறார், கமல் தயாரிப்பில் ரஜினியை இயக்குகிறார்! என்று அடுத்தடுத்து லோகேஷ் உச்சம் தொட்டு, தங்களின் வாய்ப்பை பறிப்பதாக அவர்களுக்கு காம்ப்ளக்ஸாம். (விடுங்க கனகு! தானா மடங்குவாய்ங்க)

*விஜய் தேவரகொண்டாவுக்கு ‘அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம்’ என ரெண்டு பிளாக்பஸ்டர் ஹிட். ஆனால் அடுத்து ரெண்டு படங்கள் செம்ம டல். இப்போது அண்ணன் நம்புவது ‘வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்’ படத்தை. இதில் தேவரகொண்டாவுக்கு நான்கு ஹீரோயின்கள். கேத்ரீன் தெரேசா, ஐஸ்வர்யா ராஜேஸ், ராசி கண்ணா மற்றும் இசபெல்லா ஆகியோர். 
(நாலு திசையும் கலர்ஃபுல்லா இருக்குதே விஜய்)