தமிழ் சினிமாவில், ஹாலிவுட் தரத்திற்கு யோசித்து மிகவும் வித்தியாசமான கதையை எழுதி, அதனை படமாக்கி தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன்.

திரைக்கதை, வசனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என அனைத்திலும் ஆல் ரவுண்டர். பார்த்திபன் என்றதுமே பலருக்கும் இவர் வித்தியாசமான மனிதர் என்று தான் தோன்றும். சமீபத்தில் இவர் ஒருவர் மட்டுமே நடித்து, தயாரித்திருந்த ஒத்த செருப்பு திரைப்படத்தை நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தை பாலிவுட்டில் இயக்குவதுடன்,  ஹாலிவுட் திரையுலகிலும் இயக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் எழுதிய கிறுக்கல்கள், கவிதைத்தொகுப்பு, கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தின் இயக்கம் ஆகிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விழா கோவையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்காத போது பட்ட கஷ்டங்கள் பற்றியும் கூறி, அங்கு வந்திருந்த அனைவரையுமே உருக வைத்து விட்டார்.

தற்போது, பிஸியாக நடித்து கொண்டிருக்கும் இவர்...  ஒரு காலத்தில் 3 நாட்கள் உன்ன உணவு இல்லாமல் வேலை செய்துள்ளாராம். அதே போல் சாப்பிடாத பல நாட்களும் உண்டாம். ஒருமுறை சபரிமலைக்கு மாலை போட்டுகொண்டு, கோவிலு போக காசு இல்லாமல் 75 நாட்கள் விரதம் இருந்து பின் சபரிமலைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.