பிக்பாஸ் தமிழ் சீசன் 3, நிகழ்ச்சி எப்போது ஆரம்பமாகும் என சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் முதல்கொண்டு ஆவலோடு காத்திருக்கின்றனர். அதிலும் இந்த முறை எந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார்கள் என்கிற ஆவல், ஏக்க சக்கமாய் எகிறி போய்  உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக, ஒரு சில பிரபலங்கள் பற்றி பொய்யான தகவலும் அதிகம் வெளியாகி வருகிறது. ஏற்கனவே இப்படி வெளியான தகவலுக்கு நடிகை பூஜா தேவரியா, எஸ்.வி.சேகர், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பிரபலங்கள் சிலர் மறுப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது சற்றும் எதிர்பாராத மூன்று பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள் யார் யார் என்றால்... ராஜா ராணி சீரியலில் கலக்கி வரும் நடிகை ஆலியா, வெள்ளித்திரையில் எதார்த்தமான காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் , மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்றைய தினம் தான், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளதை உறுதி படுத்தும் வகையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.