இந்நிலையில் நடிகைக்கு சொந்தமாக அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. சில கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். சிவாஜியுடன் வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றது. பாலாஜி, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் அப்போது வெள்ளிவிழா கொண்டாடியது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் நடிகைக்கு சொந்தமாக அமைந்தகரையில் 3 கிரவுண்ட் நிலம் இருந்துள்ளது. இந்த நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நடிகை வாணிஸ்ரீ-யின் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரிக்க இவர்கள் முயன்றுள்ளனர். வேறு நபர்களுக்கு நிலத்தை விற்று ரூ.10 லட்சம் பெற்ற தமீம் அன்சாரி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.