கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியான 2.0 திரைப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றாலும், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. 

இதனால் வெளியான இரண்டு நாட்களிலேயே... 2 . 0  வசூல் டல்லடித்து விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள்.

 

மேலும் 2 . 0 திரைப்படத்தை தொடர்ந்து 3 . 0 வெளிவருமா? வராதா என்பது தான் பலரது கேள்வியாக இருந்தது. இந்த கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக 2 . 0  படத்தில் இடம் பெற்ற 3.0 காட்சியை,வெளியிட்டு 3.0 உருவாகும் என்பதை உறுதி செய்துள்ளார் அக்ஷய்குமார். 

தற்போது வரை 2 நாட்களில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாகவும், படத்தில் இடம்பெற்ற கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் குறிப்பாக குழந்தைகளை கவரும் வகையில் இப்படத்தின் இறுதிக்கட்டத்தில் வரும் 3.0 அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.