இயக்குனர் ஷங்கர்  இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியாகி மிக பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன் (ரோபோ).

இந்த படத்தின் வெற்றியை தொடரும் விதத்தில் தற்போது இரண்டாம் பாகத்தை மிகவும் பிரமாண்டமாக இயக்கி கொண்டிருக்கிறார் ஷங்கர். இந்த படத்தில் நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் 'அக்ஷய் குமார்' நடித்துள்ளார். 

இது நாள் வரை 2 . 0  குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்து வந்த படக்குழு, தற்போது இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 

இதில் மிகவும் பிரமாண்டமான காட்சிகளில் மேக்கிங், சண்டை, ரேஸிங், போன்ற படப்பிடிப்பின் முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது. தற்போது ஹாலிவுட் அளவில் எடுக்கப்பட்டுள்ள விவேகம் படம் போன்றே இதிலும் பல காட்சிகள் இடம் பெரும் என்கிற எதிர்பார்ப்பை இந்த மேக்கிங் வீடியோ அதிகப்படுத்தியுள்ளது.