தமிழில் 'சுந்தரா டிராவல்ஸ்' உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராதா தன்னுடைய இரண்டாவது கணவர், தன்னை சந்தேகப்பட்டு அடித்து கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் மஹத்தின் மனைவி பிராச்சி மிஸ்ராவின் Pregnancy போட்டோஸ்..!
 

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில், முரளி, வடிவேலு, நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற காமெடி திரைப்படம் 'சுந்தரா டிராவல்ஸ்'.  இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. இந்த படம் இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தாலும், இதை தொடர்ந்து, தமிழில் இவர் நடித்த படங்கள் அவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

பின்னர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட ராதா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் சப் -இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.  இதையடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு கடந்த ஓராண்டுக்கு மேல் சாலிகிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' டைட்டில் வின்னர் கனிக்கு... இத்தனை லட்சம் பரிசாக கிடைத்ததா?
 

தற்போது வசந்த ராஜாவுக்கும், ராதாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. ராதா நடிகை என்பதால் அவர் தனக்கு தெரிந்த திரையுலக நண்பர்கள் உடன், அடிக்கடி போன் மூலம் பேசி வந்துள்ளார். இதனால் ராதா மீது சந்தேகப்பட்ட வசந்தராஜா, அவரை அடித்து துன்புறுத்தியதாக கூறி,  ராதா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தன்னை தன்னுடைய இரண்டாவது கணவர் வசந்தராஜா அடித்து கொடுமை செய்வதாக பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: கவர்ச்சி உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கி அதிரவைத்த சமந்தா..! வாயடைத்து போன ரசிகர்கள்!
 

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் நாளை காலை 10 மணி அளவில் வடபழனி உதவி ஆணையர் முன்னிலையில் நடிகை ராதாவும் அவரது கணவர் சப் இன்ஸ்பெக்டர் வசந்த ராஜாவும் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.