தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்தும் கல்வி விருது வழங்கும் விழாவுக்காக தயாராகும் விருந்தில் என்னென்ன ஸ்பெஷல் உணவுகள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

TVK Vijay Students Meet Food Menu List : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடத்தப்பட்டது. அந்த வகையில் மூன்றாவது ஆண்டாக இந்த வருடமும் பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை கெளரவிக்கும் விழாவை தமிழக வெற்றிக் கழகம் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்த விழா இன்று நடைபெறுகிறது.

இந்த விழாவில் 88 தொகுதிகளைச் சேர்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோருடன் வந்து கலந்துகொண்டனர். இதில் தமிழ்நாட்டில் முதல் மதிப்பெண் எடுத்த திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலிக்கு வைர கம்மல் பரிசாக வழங்கினார் விஜய். இதையடுத்து தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு மேடையில் ஊக்கத்தொகை வழங்கிய கையோடு அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார் விஜய்.

இந்த விழாவில் மாணவ, மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் என 2000 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்காக மதிய உணவும் தயார் செய்யப்பட்டது. சைவ உணவு தான் அனைவருக்கும் தயார் செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 24 வகை உணவுகளுடன் தயாராகி உள்ள அறுசுவை உணவின் மெனு லிஸ்ட்டும் வெளியாகி இருக்கிறது. அதன் பட்டியல் பின்வருமாறு :

*பாதாம் கத்லி

*சிப்ஸ்

*ஸ்பிரிங் ரோல்

*பேபி கர்சன் 65

*தயிர் ரைத்தா

*ஆலு சப்ஜி

*உருளைக்கிழங்கு காரக்கறி

*சாம்பார்

*ரசம்

*சாப்பாடு

*காளான் பிரியாணி

*ருமாலி ரொட்டி

*பால் பாயாசம்

*ஐஸ்கிரீம்