Asianet News TamilAsianet News Tamil

2021 Major deaths : 2021-இல் மண்ணை விட்டு மறைந்த தமிழ் நட்சத்திரங்கள்.! ஒரு ரீவைண்ட் அஞ்சலி.!

நாயகன், குணச்சித்திரம், வில்லன் என முப்பரிமாணத்தில் மிளிர்ந்தவர் ஸ்ரீகாந்த். சிவாஜியுடன் சேர்ந்து நடித்த தங்கப்பதக்கம் என்ற படம் அவர் பெயரை சொல்ல போதும்.

2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!
Author
Chennai, First Published Dec 31, 2021, 9:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

கடந்த ஆண்டைப் போலவே கொரோனா இந்த ஆண்டும் அன்பானவர்களை காவு வாங்கியது. அந்த வலையில் தமிழ் திரையுலகமும் இந்த ஆண்டு முக்கியமான பிரபலங்களை இழந்தது. முக்கியமான திரைத் துறை ஆளுமைகளை பார்ப்போம். 

2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

தமிழ் திரையுலகின் இயக்குநர் கே.வி.ஆனந்த் (54) கொரோனா தொற்றால் ஏப்ரல் 30 அன்று காலமானார். ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய கே.வி.ஆனந்த், பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தார். கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கி பெயரெடுத்தார் கே.வி.ஆனந்த்.   2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

தமிழ்த் திரையுலகில் முற்போக்குப் படங்களை இயக்கி பெயரெடுத்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் (61) மார்ச் 30 அன்று காலமானார். மூளையில்  ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எஸ்.பி. ஜனநாதன், சிகிச்சை பலனின்றி காலமானார். இயற்கை படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த, முதல் படத்துக்கே தேசிய விருதைப் பெற்றார். ஈ, பேராண்மை, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை, பூலோகம் ஆகிய படங்களை இயக்கியவர். லாபம் படத்தை இயக்கி, கடைசி கட்டப் பணியில் இருந்தபோதுதான் ஜனநாதன் காலமானார்.2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

 பழம்பெரும் நடிகரான ஸ்ரீகாந்த் (81) அக்டோபர் 12 அன்று காலமானார். சென்னையில் வசித்துவந்த ஸ்ரீகாந்த், திடீரென ஏற்பட்ட உடல் நலக்கோறால் காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படம் மூலம் ஸ்ரீகாந்த் அறிமுகமானார். நாயகன், குணச்சித்திரம், வில்லன் என முப்பரிமாணத்தில் மிளிர்ந்தவர் ஸ்ரீகாந்த். சிவாஜியுடன் சேர்ந்து நடித்த தங்கப்பதக்கம் என்ற படம் அவர் பெயரை சொல்ல போதும்.2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

எண்பதுகளில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சித்ரா (56), மாரடைப்பால் ஆகஸ்ட் 21 அன்று காலமானார். ரஜினி, கமல், பிரபு, சரத்குமார், கார்த்திக் என அந்தக் காலகட்டத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் சித்ரா. ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் பெற்று தந்தது. நல்லெண்ணய் விளம்பரத்தில் நடித்து புகழ் பெற்றதால் பின்னாளில் நல்லெண்ணய் சித்ராவாகவே குறிப்பிடப்பட்டார்.

 2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடன இயக்குனரான சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்றால், நவம்பர் 28 அன்று காலமானார். தன்னுடைய முகபாவணையுடன்கூடிய நடன அசைவுகளுக்காக சிலாகிக்கப்பட்டவர். ரஜினி, சிரஞ்சீவி, சரத்குமார் மற்றும் விஜயகாந்த் போன்ற பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். திருடா திருடி படத்தில் மன்மத ராசா பாடலுக்கு அமைத்த நடனம் இவருடைய மைல் கல்லில் ஒன்று.

2021 Major deaths: Tamil stars who disappeared from the soil in 2021! A rewind tribute.!

சின்னக் கலைவாணர் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட நடிகர் விவேக் (59), ஏப்ரல் 17 அன்று  இதய செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். ரசிகர்களையும் திரைத் திரையுலகினரையும் கடும் அதிர்ச்சியில் தள்ளியது விவேக்கின் மரணம். அவர் உயிரிழப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோன தடுப்பூசி போட்டு கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏறபடுத்தினார். விவேக்கின் உடல் தகனம் அரசு முழு மரியாதையுடன் நடைபெற்றது. 

இவர்களைத் தவிர ஜெயந்தி, பாண்டு, புலமைப்பித்தன், பிறைசூடன், பிரான்சிஸ் கிருபா எனத் தமிழ் திரையிலகைச் சேர்ந்த பலரும் காலமானார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios