மோடி, ராகுல் காந்தி வரிசையில் விஜய்! வெறும் மூன்று முறைக்கே இப்படியா?  

சமூக வலைத்தளங்களில் உலகமக்கள் பலரால் அதிகம் பயன் படுத்தப்படும், ட்விட்டர் பக்கத்தில் 2018  ஆண்டு அதிகம் பேசப்பட்ட இந்திய நபர்கள் குறித்த பட்டியலை டுவிட்டர் வெளியிட்டுள்ளது.

இதில் வழக்கம்போல் பெரும்பாலும் அரசியல்வாதிகளே தான் இடம்பெற்றுள்ளனர். ஒரு சில  திரையுலக பிரபலங்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். 

அந்த வகையில் டாப் 10 பட்டியலில் 8வது இடத்தில் தளபதி விஜய் பெயர் இடம்பெற்றுள்ளது. டாப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே தமிழ் நடிகர் இவர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் அதிகமாக பேசப்பட்ட 10 நபர்களின் பட்டியல் இதோ:

1. பிரதமர் நரேந்திரமோடி


2. ராகுல்காந்தி


3. அமித்ஷா


4. யோகி ஆதித்யநாத்


5. அரவிந்த் கெஜ்ரிவல்


6. பவன்கல்யாண்


7. ஷாருக்கான்


8. விஜய்


9. மகேஷ்பாபு

 


10. சிவராஜ்சிங் செளஹான்

மேலும் இந்த பட்டியலில் விஜய் தவிர மற்ற அனைவரும் இந்த ஆண்டு பல டுவீட்டுக்களை பதிவு செய்துள்ளனர் என்பதும், தளபதி விஜய் இந்த ஆண்டில் மூன்றே மூன்று டுவிட்டுக்களை மட்டுமே பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.