கடந்த வருடம் அதிக படியான காமெடி படங்களில் நடித்த நடிகர் என பெயர் வாங்கியவர் நடிகர் சூரி.  இந்த வருடம் மிகவும் குறைவான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்ததில் முக்கால் வாசி படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. 

அந்த வகையில் இந்த வருடம் சூரி நடித்த படங்கள் என்னென்ன என்பதை இப்போது பார்க்கலாம்:

* சீமாராஜா
* சாமி ஸ்கொயர்
* ஸ்கெட்ச்
*  பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
* பக்கா 
* கடைக்குட்டி சிங்கம் 
* சிலுக்குவார் பட்டி சிங்கம்

ஆகிய ஏழு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இதில் சீமராஜா,  சாமி ஸ்கொயர், ஸ்கெட்ச், பக்கா  ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல் மற்றும் சிலுக்குவர் பட்டி சிங்கம் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற படங்களாக அமைந்தது. கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மட்டுமே வெற்றி படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபு:

ஆனால் காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு இந்த வருடம் யோகமான வருடம் என்று தான் கூறவேண்டும். கடந்த ஆண்டு சிறு பட்ஜெட் படங்களில் சிறு வேடங்களில் மட்டுமே அதிகமாக காணப்பட்ட இவர், இந்த ஆண்டு பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தினார். 
இவருடைய எதார்த்தமான காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

2018 ஆண்டில் மட்டும்...யோகிபாபு மொத்தம் 20 படங்களில் நடித்துள்ளார்.
அவை...

* சர்கார்
* சீமராஜா 
* பில்லா பாண்டி 
* குலோபகாவாலி 
* காளி
* ஜூங்கா
* வீரா 
* தானா சேர்ந்த கூட்டம் 
* எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் 
* செம 
* செம போத ஆகாத 
* ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல 
* பரியேறும் பெருமாள் 
* சிலுக்குவார்பட்டி சிங்கம் 
* ஒரு குப்பை கதை 
* கலகலப்பு 2 
* மன்னர் வகையறா 
* காற்றின் மொழி 
* மோகினி 
* கோலமாவு கோகிலா 

ஆகிய படங்கள், இதில் பல தோல்வி படங்கள் இருந்தாலும் யோகி பாபுவின் காமெடி பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், மன்னர் வகையறா, காற்றின் மொழி, கலகலப்பு 2 , தானா சேர்ந்த கூட்டம், சர்கார், ஆகிய வெற்றி படங்களில்  யோகி பாபு தன்னுடைய மாஸ் காமெடியால், ரசிகர்களை மகிழ்வித்தார். இதன் மூலம் இந்த ஆண்டின் சிறந்த காமெடியன் யோகிபாபு என்பதே பலரது கருத்தாக உள்ளது.