‘சர்கார்’ படத்துக்கு விஜய்க்கு வைக்கப்பட்ட 175 அடி கட் அவுட்டுக்கு சவால் விடும் வகையில் அஜீத் ரசிகர்கள் ‘விஸ்வாசம்’ படத்துக்கு 200 அடியில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

அஜீத்தும் விஜயும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முக்கிய போட்டியாளர்களாகக் கருதப்பட்டு வருகின்றனர். இருவரது பட வசூல்களையும் ஒப்பிட்டு இந்த ‘தல’, ‘தளபதி’  ரசிகர்களும் கமெண்டுகள் போடுவது மீம்ஸ்கள் தயாரிப்பது, கலாய்ப்பது என்பதுபட ரிலீஸ் சமயங்களில் சர்வசாதாரணம். 


‘சர்கார்’ ரிலீஸ் சமயத்தில் கேரள மாநிலம்  கொல்லம் நகருக்கே வெளியே ஒரு மைதானத்தில் பட ரிலீஸுக்கு  மூன்று தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அந்த 175 அடி உயர கட் அவுட் தான் இதுவரை இந்திய சினிமாவில் வைக்கப்பட்ட கட் அவுட்களிலேயே மிக உயரமானது என்று சொல்லப்பட்டது. அதை விஜயின் தீவிர ரசிகர்களான ‘கொல்லம் நண்பன்ஸ்’ என்ற குரூப் சாதித்திருந்தது. அதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் கூட வர ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய் குரூப்பின் அந்த சாதனையை  மறக்காமல் கவனத்தில் வைத்திருந்த திருச்செந்தூர் அஜீத் ரசிகர்கள் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வெளியே ஒரு பொட்டல்வெளியில் பணியைத்துவங்கி 20 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட கட் அவுட்டை ரெடிசெய்து அசத்தியுள்ளனர். இந்த கட் அவுட் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

விஜய் கட் அவுட் அமைக்கப்பட்ட இடம் பரபரப்பான சுற்றுலாத்தளம் ஆனதுபோல் இந்த இடமும் சுற்றுலாத்தளமாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.