எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக எடுக்கபடும் 2.0 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா வரும் 20ம் தேதி மும்பையில் நடக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த விழாவில் கலந்து கொள்ள முதலில் ரஜினி மறுப்பு தெரிவித்தாலும், பின் லைக்கா நிறுவனம் ஹிந்தியில் 2.0 அதிக விலைக்கு விற்றுள்ளதால் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என வர்பூர்த்தியதால் தற்போது கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில், ரஜினிகாந்த், எமிஜாக்சன், இயக்குனர் சங்கர், லைக்கா நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இதில் கலந்து கொள்வதற்கு மும்பையை சேர்த்த பல பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர் படக்குழுவினர்.

இந்த விழாவிற்கு தமிழ் மீடியாக்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதாம், ஆனால் இயக்குனர் மற்றும் ஒரு சில தயாரிப்பாளர் நிறுவனத்தை சேர்த்தவர்கள் வேண்டாம் என கூறி புறக்கணித்து விட்டதாக கூறப்படுகிறது..